டி.என்.பி.எஸ்.சி. வினா வங்கி - பொதுத்தமிழ்

₹150.00

டி.என்.பி.எஸ்.சி. வினா வங்கி - பொதுத்தமிழ்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு பத்தாம் வகுப்பு தரத்தில்தான் ‘பொதுத் தமிழ்’ பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டம் ஒன்றாக இருந்தாலும் நடைமுறையில் தேர்வுகளுக்கு ஏற்ப வினாக்களின் தரத்திலும் மாற்றம் இருக்கிறது. அதிலும் 2013-ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி பாடத் திட்டம் மாற்றப்பட்ட பிறகு ‘பொதுத் தமிழ் வினாக்கள் மிகவும் கடினமாக இருக்கிறது, தேர்வு எழுத நேரம் போதாது’ என்று போட்டித் தேர்வர்கள் குறைபட்டுக்கொள்கிறார்கள். வினாக்களின் போக்குகளை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் படிக்கவும் தேர்வு எழுதும் நேரத்தை நிர்வாகம் செய்யவும் டி.என்.பி.எஸ்.சி பொதுத் தமிழ் ஒரிஜினல் வினாத்தாள்களை தொகுத்துத் தந்துள்ளோம். பொதுத் தமிழ்ப் பாடத்தை படிக்கும் முன்பும் படித்த பின்பும் இந்த வினாக்களை படித்துப் பார்க்கும்போது, பொதுத் தமிழ்ப் பாடத்தில் உங்களது திறனை நீங்களே எடைபோட்டு பார்க்க முடியும். விடைகளும் கேள்விக்கு அருகிலேயே தரப்பட்டுள்ளதால் உடனுக்குடன் விடைகளை சரிபார்த்துக்கொள்ள முடியும். தேவையான இடங்களில் விடைகளுக்குத் தேவையான விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. இந்த நூலில் 2013, 2014, 2015, 2016 (பிப்ரவரி வரை) டி.என்.பி.எஸ்.சி. பொதுத் தமிழ் வினாத்தாள்களை தந்துள்ளோம். இதில் மொத்தம் 1,060 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. போட்டித் தேர்வர்கள் பயிற்சி எடுத்து பயத்தைப் போக்கி அரசு பணிக்குச் செல்ல இந்த வினாத் தொகுப்பு பயன் உள்ளதாக இருக்கும். வாழ்த்துகள்!

Related Products

டி.என்.பி.எஸ்.சி. வினா வங்கி - பொதுத்தமிழ்

₹150.00

View Now

டி.என்.பி.எஸ்.சி குரூப்-IIA தேர்வு

₹455.00

View Now

தேர்வு வாழ்க்கையும் வாழ்க்கைத் தேர்வும்

₹130.00

View Now

நெடுஞ்சாலை வாழ்க்கை

₹175.00

View Now

டி.என்.பி.எஸ்.சி குரூப்-IV தேர்வு

₹500.00

View Now

எந்திரன்

₹150.00

View Now

பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும்

₹495.00

View Now

படிப்படியாய் படி

₹130.00

View Now