பாபநாசம் சிவன்
இசையால் வசமாகா இதயமுண்டோ _ பாபநாசம் சிவனின் கீர்த்தனைகளைக் கேட்கும்போது, இது நூற்றுக்கு நூறு உண்மை என்பது புரியும். கர்னாடக இசையே மனதை மயக்கக் கூடியதுதான்! உள்ளத்தை உருக்கும் பக்தியும் அதில் சேர்ந்துகொண்டால்... அதுதான் பாபநாசம் சிவனின் கீர்த்தனைகள். பாபநாசம் சிவனுக்கு பூஞ்சையான சரீரம். சிறுவயதில் சிரமங்கள் மிகுந்த வாழ்க்கை. இந்த விதமான வாழ்க்கைச் சூழலை அனுபவித்தவர்கள் கவிஞர்கள் ஆகியிருக்கிறார்கள். ஆனால் சாரீர வளமை மிகுந்திருந்த சிவன், குரல் வளத்தோடு பாடுவது மட்டுமல்லாது, கவி வளத்தோடு கீர்த்தனைகளை தாமே இயற்றியும் பாடியிருக்கிறார். கடந்த நூற்றாண்டு கண்ட கர்னாடக இசையுலக அதிசயம் பாபநாசம் சிவன். இப்போது கர்நாடக இசைக் கச்சேரிகளில் இரண்டு அல்லது மூன்று மணிநேரம் பாடுவதற்குள் பாடகர்களும் சோர்வடைகிறார்கள்; ரசிகர்களுக்கும் அலுப்பு தட்டி விடுகிறது. ஆனால், பாபநாசம் சிவன் போன்றோர் உடல் முடியாத நிலையிலும் பல மணி நேரம் தொடர்ந்து பாடி ரசிகர்களைக் கிறங்கடித்திருக்கிறார்கள். '1914, ஆனி மாதம். என் தமையனார் குளித்தலை பள்ளியில் தமிழாசிரியராக இருந்தபோது, அவருடைய திருமணம் நடந்தேறியது. அந்தக் கலியாண கோஷ்டிய