ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 3)

₹105.00

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 3)

தேடலும் கேள்விகளும்தான் மனதை தீவிரமான ஆன்மிகப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன என்கிறார்கள் பெரியோர்கள். ஆன்மிகம் தொடர்பான கேள்விகளும் சந்தேகங்களும் மிக இயல்பாக நம்மோடு இருக்கின்றன. நாம் எல்லோருமே பதில்களைத் தேடும் மனநிலையில் இருக்கிறோம். இறைவன் எங்கிருப்பான்... யாரெல்லாம் அவனை அறிந்தவர்கள்..? பாவம் _ புண்ணியம், நல்ல நேரம் _ கெட்ட நேரம் என்பதெல்லாம் என்ன..? அன்றாட வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்கள் சரிதானா? இதுபோன்ற பல கேள்விகளுக்கு சக்தி விகடன் இதழில் தொடர்ந்து பதிலளித்து வருகிறார் ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். ஐயம் போக்கும் விதத்தில் அவர் அளித்துவரும் ஆன்மிக பதில்கள் வாசகர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன. இந்த பதில்களின் தொகுப்பு ஏற்கெனவே ஐயம் போக்கும் ஆன்மிகம் என்ற தலைப்பில் இரண்டு பாகங்கள் விகடன் பிரசுரமாக வெளியாகி பரவலான பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றன. இது அதன் மூன்றாம் பாகம். இந்த நூலிலும் ஆன்மிகம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான பதில்களை அளித்திருக்கிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். வாங்கிப் படித்து, பயன்பெறுங்கள்!

Related Products

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 3)

₹105.00

View Now

என்றும் வாழும் எம்.ஜி.ஆர்.

₹175.00

View Now

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 2)

₹105.00

View Now

பாபநாசம் சிவன்

₹50.00

View Now

ஃப்ளாஷ்பேக்

₹125.00

View Now

சுந்தர காண்டம்

₹230.00

View Now

அஞ்சாத சிங்கம் சூர்யா

₹100.00

View Now

எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்

₹150.00

View Now