பறவைப் பார்வை ப்ரபஞ்சம்: BIrd View World (Tamil Edition)
ப்ரபஞ்ச பரிணாமம் என்பது ஒரு புதிர். அந்தப் பரிணாமம் எங்கே தொடங்குகிறது. எதிலே முடிகிறது என்பது மிகப்பெரிய அதிசியமான ரகசியம், அவற்றை ஆராயும் மெய்ஞானிகளும் விஞ்ஞானிகளும் அவரவர் கண்டு பிடிப்புக்கேற்ப சொல்கிறார்கள். ஆனால் இன்று வரை யாராலும் அறுதியிட்டு இதுதான் என்று நிச்சயமாக சொல்ல இயலாத புதிர் ,ரகசியம் ,ஆச்சரியம் இந்தப் ப்ரப்ஞ்சப் பரிணாம வளர்ச்சி என்பது, எப்போது தோன்றியது , எப்போது முடிவுக்கு வரும் என்றெல்லாம் ஓரளவு கணிக்கலாமே தவிர உறுதியாக சொல்ல முடியாத பேருண்மை பெரும் ஆச்சரியம், பெரும் ரகசியம் ஆகவே இந்தப் பரிணாம வளர்ச்சியை ஒவ்வொருவருமே அவரவர் கற்பனைக்கு எட்டிய வரையில் சொல்கிறார்கள், அந்தக் கற்பனை உண்மையா பொய்யா என்றே தெரியாது ,ஒருவேளை உண்மையாகவும் இருக்கலாம்.ஆராய்வோம் . என் முதல் வேஷம்
இந்தப் ப்ரபஞ்சமென்னும் நாடக மேடைக்கு என்னை அனுப்பிய இறைவன் எனக்கு கொடுத்த முதல் வேடம் எது தெரியுமா ? அந்த முதல் வேடம் புனைந்த பிறகு ஏறபட்ட அனுபவங்களால்தான் மற்ற வேடங்களைப் புனைந்தேன் நான். அந்த முதல் வேடம் என்ன ? எங்கிருந்து அனுப்பினான் எங்கே அனுப்பினான் எப்படி என்னை அனுப்பினான் இறைவன் என்பதைக் கற்பனை செய்து பார்த்தேன் வியப்பாயிருக்கிறது அந்த ஜீவ பயணம். அதை விலாவாரியாகப் பார்ப்போமா
அன்புடன்
தமிழ்த்தேனீ Sold by New Horizon